நம் தமிழகத்தின் தலைமை நீதிமன்றமாக காணப்படுகிறது சென்னை உயர் நீதிமன்றம். சென்னை உயர் நீதிமன்றம் கூறும் அனைத்து உத்தரவுகளையும் தமிழ்நாடு மட்டுமின்றி மத்திய அரசும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார் சஞ்சீப் பானர்ஜி. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தற்போது மேகலாயா நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கம் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இன்றைய தினமும் வழக்கறிஞர் பலரும் போராட்டத்திலும் ஈடுபட்டு இருந்தனர். ஆயினும் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் நீதிபதி சஞ்சீப் பானர்ஜி இடமாற்றத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ள சம்பவம் தமிழக வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
அதன்படி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மேகலாயா உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.