இரண்டாம் சுதந்திரப் போராட்டத்திற்கு தயாராகுங்கள் : காங்கிரஸ்

காங்கிரஸ் மேற்கொள்ள உள்ள பாதயாத்திரை இரண்டாம் சுதந்திரப் போராட்டமாக இருக்கும் என கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேச்சு

3500 கிலோமீட்டர் தூரம் நான் நடப்பேன் என ராகுல் காந்தி சொன்னபோது தங்களுக்கு தயக்கம் இருந்ததாகவும் ஆனால் தலைவர் உறுதியாக இருந்த இரண்டு நாட்களில் பாஜகவின் அடிமைகளாக உள்ள அமலாக்கத்துறை அன்னை சோனியா காந்தி வீட்டு கதவை தட்டியது இது போன்ற செயல்களை செய்யக்கூடிய பாசிச கட்சிகளின் செயல்களை இந்த பாதயாத்திரை வேர் அறுக்கும்.

இந்த யாத்திரையில் காங்கிரஸ் கட்சி கொடி பயன்படுத்த போவதில்லை. இந்திய தேசமே பாதையாத்திரையில் நடக்க வேண்டும் அப்போதுதான் பாசிசத்தை அகற்ற முடியும்.

இந்தப் பாதயாத்திரை இரண்டாம் உலகப் போருக்கான யாத்திரை என்பது அனைவரும் உணர்ந்து மோடியின் அரியணையை அசைக்க கூடிய அளவில் இருக்க வேண்டுமென கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேச்சு

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment