பிரேமலு ஹீரோயின் மமிதா பைஜு தமிழில் கலக்கினாரா?.. ஜி.வி. பிரகாஷின் ரெபல் விமர்சனம் இதோ!

இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜு, ஆதித்யா பாஸ்கர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் தான் ரெபல். இந்த படத்தில் புரட்சிகரமான மாணவராக ஜி.வி. பிரகாஷ் நடிக்க முயற்சித்திருக்கிறார்.

பென்சில் படத்தில் வந்த காமெடி மாணவராகவே சில இடங்களில் ஜி.வி. பிரகாஷ் தெரிவது படத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாகவே தெரிகிறது.

ரெபல் விமர்சனம்:

80களில் மூணாறு பகுதியில் வசித்து வந்த ஏழை மக்கள் கல்விக்காக பாலக்காடு வரை சென்று படிக்க வேண்டிய சூழல் இருந்தது. ஜி.வி. பிரகாஷ், ஆதித்ய பாஸ்கர் உள்ளிட்ட தமிழ் மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைத்தாலும், மலையாளிகள் மத்தியில் பெரிதாக இடம் கிடைக்கவில்லை.

ஆசிரியர்கள், சீனியர்கள் என பலரும் தமிழ் மாணவர்கள் மீது வெறுப்பை காட்டுகின்றனர். மலையாளிகளை வில்லன்களாக கொண்டு தமிழ் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு பழிவாங்கும் கதிர் எனும் கதாபாத்திரத்தில் புரட்சிகரமான இளைஞராக ஜி.வி. பிரகாஷ் மாறும் இரண்டாம் பாதி சிறப்பாக இருந்தாலும், முதல் பாதி சோதித்து விடுகிறது.

மலையாளிகளும், தமிழர்களும் ஒன்றாக சேர்ந்துக் கொண்டு மஞ்சுமெல் பாய்ஸ் மற்றும் லியோ, ஜெயிலர் படங்களை பார்த்துக் கொண்டாடி கொண்டிருக்கும் நேரத்தில் இது தேவையில்லாத ஆணியாகவே இருப்பது தான் இந்த படத்துக்கு மிகப்பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது.

ஆட்டோகிராஃப் படத்திலேயே சேரன் கேரளாவுக்கு படிக்கச் சென்ற கதைகளை எல்லாம் பார்த்து விட்ட ரசிகர்களுக்கு மீண்டும் அதே போன்ற ஒரு கதை அதன் பின்னர் மாஸ்டர் படத்தில் நடந்தது போல கல்லூரி தேர்தல், அதில் நடக்கும் பஞ்சாயத்து என வழக்கமான டெம்பிளேட் கதையாக செல்லும் இதை எடுத்துக் கொண்டு படமாக பண்ணியதே ஏன் என்கிற கேள்வியை எழுப்பாமல் இல்லை.

ஜி.வி. பிரகாஷுக்கு இன்னமும் நடிப்பு பயிற்சி தேவை. ஒரு சீனில் கூட ரியாக்‌ஷன் ஹீரோவுக்கான கம்பீரம் இல்லை. மமிதா பைஜுவுக்கும் இந்த படத்தில் பெரிதாக ஸ்கோப் இல்லை. ஆதித்யா பாஸ்கர் நடிக்க முயற்சித்தாலும் அவரையும் கொஞ்ச நேரத்தில் முடக்கி விடுகிறார் இயக்குநர்.

பெரிய அரசியலை பேசும் படமாக இருக்கும் என எதிர்பார்த்து இந்த படத்தை பார்க்க சென்ற ரசிகர்களுக்கு இதெல்லாம் இப்போ எதுக்கு என்கிற கேள்வியைத்தான் படம் கொடுத்து அதிருப்தியடைய செய்கிறது.

ரெபல் படத்தை மமிதா பைஜுவுக்காக ஒரு முறை பார்க்கலாம். சில இடங்களில் இயக்குநரின் ஐடியாலஜி நல்லா இருந்தாலும், முழுதாக படமாக எடுபடவில்லை.

ரெபல்: பவர் பத்தல!

ரேட்டிங்: 2/5.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...