உ.பியில் பாஜக; பஞ்சாபில் காங்கிரஸ்! போட்டி போட்டு அறிவிக்கப்படும் முதற் கட்ட வேட்பாளர் பட்டியல்!

அடுத்த மாதம் இந்தியாவிற்கே முக்கியமான மாதமாகக் அமைந்துள்ளது. ஏனென்றால் இந்தியாவில் அடுத்த மாதம் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் ஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சி செய்யும் பாஜக தனது முதற் கட்ட வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. அதில் பாஜக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் தனது எண்பத்து ஆறு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதன்படி பஞ்சாப் மாநில முதல்வர் சஞ்சித் சிங் சன்னி இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சம்கவுர் சாகிப் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

அதேவேளையில் அமிர்தசரஸ் தொகுதியில் நவ்ஜோத் சிங் சித்து போட்டியிடவுள்ளார். காங்கிரஸின் முதற் கட்ட வேட்பாளர் பட்டியலில் தற்போதைய எம்எல்ஏக்கள் பெரும்பாலானோருக்கு சீட் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment