கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்த வெண்டைக்காய் சூப் செய்வது எப்படி? இதோ!

கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது. இன்று வெண்டைக்காயில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பிஞ்சு வெண்டைக்காய் – 7,
உப்பு – சிறிது,
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 3 டீஸ்பூன்,
துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் – 1 கப்.
அலங்கரிக்க

கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல், சீரகத்தூள் – சிறிது,

soup 16636766263x2 1

வேகமாக தொடங்கிய பொன்னியின் செல்வன் 2 படப்பிடிப்பு! லீக்கான போட்டோஸ்!

கொத்தமல்லி, வெண்டைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு வெண்டைக்காயை பொன்னிறமாக வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சைவாசனை போக வதக்கிய பின்னர் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் ஊற்றி கொதி விடவும்.

நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் வறுத்த வெண்டைக்காய் மேலே தூவி, சீஸ் துருவல், கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

சூப்பரான வெண்டைக்காய் சூப் ரெடி.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment