சென்னை வேளச்சேரியில் 4 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவருடைய மாமியார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை வேளச்சேரி வீட்டு வசதி குடியிருப்பு பகுதியை சேர்ந்த இந்துமதிக்கும் தி,நகர் பகுதியை சேர்ந்த குமரனுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைப்பெற்றது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த இந்துமது ஜூலை 22-ம் தேதி தற்கொலை செய்துக்கொண்டார்.
இந்நிலையில் தன்னுடைய மரணத்திற்கு குமரனின் தாய்தான் காரணம் என வாட்ஸ் அப்பில் ஆடியோ பதிவு செய்து சகோதரிக்கு அனுப்பியுள்ளார். பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதற்கிடையில் சம்பவம் குறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் அவருடைய பெற்றோர் புகார் அளித்த நிலையில் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வந்தார். இந்த சூழலில் அவருடைய கணவர் கைது செய்யப்பட்ட நிலையில் , மாமியார் தலைமறைவானார்.
தற்போது தற்கொலைக்கு தூண்டியதாக குமரனின் தாய் சாந்தி கைது செய்து சிறையில் அடைத்த தாக கூறப்படுகிறது.