முதல்வர் முன்னிலையில் முன்னெச்சரிக்கை மீட்டிங்! அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு!!

நம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வெள்ள நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஸ்டாலின்

இதன் மத்தியில் தமிழகத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழையின் போது கூடுதல் கவனம் செலுத்தி பருவகால சவால்களை திறம்பட கையாள மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மழைப்பொழிவு அதிகம் இருக்கும் இடங்களில் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment