சூரியனின் அருள் கிடைக்கும் அற்புத நாள்…! இன்று தானம் செய்தால் 1000 மடங்கு பலன்…!!

ஒவ்வொரு மனிதருக்கும் எப்போதாவது தான் நல்ல வாய்ப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்துபவர்களுக்கு வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் உண்டாகும். அவர்கள் மென்மேலும் முன்னேற ஏணிப்படிகளாக அந்த வாய்ப்புகள் பயன்படும். அதைச் சரியாகப் பயன்படுத்துவதுதான் அறிவு.

சமயோசிதமாக சிந்திக்கும் இந்த அறிவு வேலை செய்தால் மட்டுமே வாய்ப்பைப் பயன்படுத்த முடியும். வெற்றியாளவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அவர்கள் இத்தகைய வாய்ப்புகளை மிகச்சரியாகப் பயன்படுத்தியதால் தான் லட்சிய வாழ்க்கையில் முன்னேறி இருப்பது நமக்குத் தெரியவரும்.

ஆன்மிகத்திலும் அப்படித்தான். வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும்போது நாம் தூங்கி விடக்கூடாது. அதைப் பற்றி உடனடியாக புரிந்து கொண்டு என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து நம் கடமையை நிறைவேற்றி விட வேண்டும்.

அந்த வகையில் இன்று பானு சப்தமி. (26.02.2023). ஞாயிற்றுக்கிழமை என்றாலே சூரியனுக்கு மிகவும் உகந்த நாள் தான். இன்று என்ன செய்ய வேண்டும். சூரியனை எப்படி வழிபட வேண்டும்? என்ன செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

பானு ஸ்ப்தமியை பானு யோகம் என்று குறிப்பிடுவர். இது, 1000 சூரிய கிரஹணங்களுக்குச் சமமாக புராணங்களில் போற்றப்படுகிறது.

Sun God 2
Sun God 2

அதாவது பானு ஸப்தமி அன்று நாம் செய்யும் பூஜைகள், மந்திரங்கள், ஹோமங்கள், தானங்கள் போன்றவை சாதாரண நாட்களில் செய்வதால் ஏற்படும் புண்ணியத்தைக் காட்டிலும் சுமார் 1000 மடங்கு அதிக புண்ணியத்தைத் தரக்கூடியவை.

கோதுமை மாவில் செய்த இனிப்பு பலகாரங்கள் தானம் செய்வதும், செப்பு பாத்திரத்தில் கோதுமை வைத்து தானம் செய்வதும், சூரியனின் அருளைப் பெற்றுத் தரும். கண் பார்வையில் உள்ள கோளாறுகள் நீங்கும். தந்தைக்கு ஆரோக்கியம் கிட்டும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.

பானு சப்தமியின் விசேஷம்

பானு சப்தமி சூரிய கிரகணத்திற்கு ஒப்பானது. அன்று பித்ரு தர்ப்பணம் செய்தால் மிகவும் நல்லது. சூரிய கிரகணம் முடிந்த பின் செய்யும் தர்ப்பணத்திற்கு ஒப்பானது.

நதி தீரத்தில் புனித நீராடுதல், சூரிய நமஸ்காரம் செய்வது, காயத்ரி மந்திரம் சொல்வது, ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய ஸ்தோத்திரம் பாராயணம் செய்வது, தானம் செய்தல் ஆகியவை நன்மை பயக்கும். இன்று தானம் செய்தால் 1000 மடங்கு பலன் கிடைக்கும்.

Sun God
Sun God

வீட்டில் திறந்த வெளியில், சூரிய வெளிச்சம் தெரியும்படியான இடத்தில் கோதுமையால் செய்த இனிப்புகளை சூரிய பகவானுக்கு படைப்பது விசேஷம். இன்று விரதமிருந்தால் நீண்ட நாளாக நோய்வாய்ப்பட்ட தாய் தந்தையர், மனைவி அல்லது கணவன் நோயிலிருந்து விடுபடுவர் என்பது உறுதி. கண் சம்பந்தமான வியாதிகளும் நீங்கும் என்பது நிச்சயம். நல்ல பதவிகள் கிடைக்கும்.

அரசியலில் பிரகாசிக்க, அரசாங்க வேலை கிடைக்க, களத்திர தோஷம் நீங்க, தொழுநோய் தீர, பார்வை கோளாறுகள் நீங்க, பித்ரு தோஷம் நீங்க பானுசப்தமியான இன்று சூரியபகவானை மனமுருக வழிபடுங்கள். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும் என்பதால் இதை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...