நடிகை ரம்பா சென்ற கார் விபத்து! ரசிகர்கள் அதிர்ச்சி..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ரம்பா. இவர் கனடா நாட்டின் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்தார்.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை ரம்பா அவ்வப்போது புகைப்படங்களை ஷேர் செய்து வழக்கம்.

அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தன்னுடைய குழந்தைகளை அழைத்து செல்லும் வழியில் கார் விபத்துக்குள்ளானதாக தெரிவித்துள்ளார்.

இதில் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாகவும், இருப்பினும் தன்னுடைய பெண்குழந்தை பலத்த காயமடைந்துள்ளதால், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதனால் அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.

நடிகை ரம்பாவின் இத்தகைய பதிவானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.