நேசமணிக்காக ஹர்பஜன் சிங்கும் பிரார்த்தனை- என்ன கொடுமை சரவணன்

நேற்று முன் தினம் ஆரம்பமான உப்பு சப்பில்லாத ப்ரே பார் நேசமணி என்ற டுவிட்டர் உலக அளவில் ட்ரெண்ட் ஆகி முக்கியத்துவம் ஆகி விட்டது. இந்த நேசமணி ட்ரெண்ட் குறித்து வடிவேலுவே ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

30ba283795c85f6334696c3be14cf807-1

எனக்கே ஒண்ணும் புரியலப்பா என இது குறித்து கேள்வி கேட்ட தொகுப்பாளர் பெண்ணிடம் வடிவேலு கூறியுள்ளார். இந்திய அளவில் வடிவேலு எல்லோருக்கும் பரிட்சயமாகி விட்டார்.

எல்லோரும் இதை பற்றி மீம்ஸ் போட்டு நேசமணிக்காக பிரார்த்திக்கையில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் இது குறித்து டுவிட் செய்துள்ளார்.

என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்…ட்ச்! மீண்டு வா நேசா என தமிழில் டைப் செய்துள்ளார் அட ஆண்டவா நேசமணி விசயத்தில் இன்னும் என்னென்ன கொடுமைகளை நாம் பார்க்க போகிறோமோ தெரியவில்லை.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment