வாழ்க்கை ஒரு வட்டம்.. ஹரி கெஞ்சி கேட்டும் ஏற்காத தியாகராஜன்.. அடுத்த 10 வருஷத்தில் தலைகீழான சம்பவம்..

பொதுவாக சினிமாவை பொறுத்த வரையில் திடீரென உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஒருவர் அடுத்த சில படங்கள் வெளியாகும் போது அப்படியே மார்கெட் இழந்து காணாமலே போய் விடுவார்கள். அந்த வகையில் நடிகர்கள் மட்டுமில்லாமல் இயக்குனர், நடிகைகள் என பலரது பெயர்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரு சில திரைப்படங்களில் நம்மை மிகவும் கவர்ந்திழுக்கும் பிரபலங்கள் திடீரென காணாமல் போவதால் ரசிகர்களும் பெரிய அளவில் விரக்தி அடைவார்கள். இன்னொரு பக்கம், அப்படி ஒருவர் பிரபலமாக இருப்பதையே ரசிகர்கள் மறந்து விடுவார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் முன்னணி நடிகராக திகழ போகிறார் என நினைத்த ஒருவர் திடீரென காணாமல் போனார் என்றால் நிச்சயம் டாப் ஸ்டார் பிரசாந்தை சொல்லலாம். ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களுடன் பணிபுரிந்து நிறைய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருந்த பிரசாந்த், ஒரு காலத்தில் அஜித், விஜய் ஆகியோரை விட முன்னணி இடத்தில் இருந்து வந்தார்.

ஆனால், அதன் பின்னர் சில படங்கள் கை கொடுக்காமல் போக திரைப்படங்களில் பெரிய அளவில் நடிக்காமல் இருந்தவர் சமீப காலங்களாக சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மீண்டும் நடித்து வருகிறார். அதிலும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்து வருவது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே இயக்குனர் ஹரிக்கும், பிரசாந்த் மற்றும் அவரது தந்தையும் நடிகருமான தியாகராஜன் ஆகியோருக்கு இடையே இருந்த ஒரு சிறிய பிரச்சனையை பற்றி தற்போது பார்க்கலாம். பிரசாந்த் திடீரென சினிமா மார்க்கெட்டை இழப்பதற்கு அவரது தந்தை தான் காரணம் என பலரும் தற்போது வரை குறிப்பிட்டு வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான் ஹரியின் முதல் திரைப்படமான தமிழ் படத்திலும் உருவாகி இருந்தது.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான கமர்சியல் இயக்குனராக இருக்கும் ஹரி, சமீபத்தில் ரத்னம் என்ற படத்தை இயக்கி இருந்தார். சிங்கம், சாமி உள்ளிட்ட பல்வேறு பிளாக்பஸ்டர் திரைப்படங்களையும் இயக்கி உள்ள ஹரி பிரசாந்தை வைத்து தான் முதல் படத்தை இயக்கி இருந்தார். அப்போது நடந்த ஒரு சம்பவத்தின்படி தமிழ் படத்தின் ஷூட்டிங்கில் ஒரு நாள் சில ஷாட்கள் மட்டும் பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அப்போது வெயில் அதிகமாக இருந்ததால் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இனிமேல் ஹீரோ நடிக்க வரமாட்டார் என்றும் வெயிலில் அவர் வந்தால் என்ன ஆவது என்றும் ஹரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் இரண்டு ஷாட்கள் மட்டும் தான் முடிக்க வேண்டும் என ஹரி கெஞ்சி பார்த்தும் தியாகராஜன் ஒத்துக் கொள்ளவில்லை என கூறியதுடன் அன்று சூட்டிங்கை நிறுத்தி உள்ளார்.

ஒரு கட்டத்தில் முன்னணியாக பிரசாந்த் இருந்தபோது அவரது தந்தை இப்படி எல்லாம் செய்ய அதன் பின்னர் வாழ்க்கை ஒரு வட்டம் என விஜய்யின் வசனம் போல இருவரது தலையெழுத்தும் மாறி ஹரி முன்னணி இயக்குனர்களில் ஒருவராகவும், பிரசாந்த் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பே கிடைக்காமல் தவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews