கார்த்திக் நடித்த சகுனி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் பிரணீதா. இந்நிலையில் தமிழ் மொழியில் இவருக்கு பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் மற்ற மொழி படங்களில் இவர் கவனம் செலுத்தி வந்தார்.
இந்த சூழலில் கொரோனா காலக்கட்டத்தில் தனது நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் நிதின் ராஜுவை எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார்.
அதோடு திருமணத்திற்கு பிறகும் சில படங்களில் நடித்து வந்த இவர் திடீரென கர்ப்பமானதால் படப்பிடிப்புகளில் இருந்து நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இந்த சூழலில் சில தினங்களுக்கு முன் இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தையடுத்து தற்போது மகள் அர்ணாவின் போட்டோ ஷூட் நடத்தி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.