ஐந்தாவது சுற்றில் தோல்வி; இந்தியாவின் தீ கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ஆட்டம் முடிந்தது!

செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நம் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்று கொண்டு வருகிறது. 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள ஏராளமான நாடுகள் வந்துள்ளன.

இதில் ஆரம்ப முதல் நம் இந்திய வீரர்களின் கைவசமே ஓங்கி இருந்தது. ஏனென்றால் தொடர்ந்து இந்திய வீரர்கள் அயல்நாட்டு வீரர்களை தோற்கடித்துக் கொண்டு வந்தனர். அதிலும் குறிப்பாக இந்தியாவின் தீ கிராண்ட் மாஸ்டர் ஆன தமிழக வீரர் பிரக்ஞானந்தா ஆட்டம் அனைவரிடமும் சுறுசுறுப்பையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திடீரென்று அவர் தோல்வியடைந்துள்ளது அனைவரையும் உறைய வைத்துள்ளது. அதன்படி ஐந்தாவது சுற்றில் ஸ்பெயின் வீரர் ஜெயிம் பிரக்ஞானந்தாவை தோற்கடித்தார். செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஓபன் பி பிரிவில் விளையாடிய தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வியடைந்துள்ளார்.

கருப்பு நிற காய்களுடன் கலம் இறங்கிய பிரக்ஞானந்தாவை 85 ஆவது நகரதலில் தோல்வியை தழுவினார். அவரின் தோல்வி இந்தியர்களிடையே பெறும் பின்னடைவை ஏற்படுத்தியதாகவும் அமைந்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...