பாஜகவில் சேரப் போறீங்களா விஷால்? – டிரெண்டாகும் ட்வீட்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நடிப்பில் வெளிவந்த இரும்புத்திரை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விஷால் பாஜக-வில் இணையப்போவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றனர். அதன் படி, கடந்த 2 தினங்களுக்கு முன் இந்துக்களின் புனித நகரமாக பார்க்ககூடிய காசிக்கு பயணம் செய்தார்.

அப்போது கோயிலில் இருக்கக்கூடிய ஏற்பாடுகள், கோயிலின் மறுவாக்கம் உள்ளிட்டவைகளை புகழ்ந்து இந்திய பிரதமருக்கு பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் விஷாலில் பதிவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்துள்ளார். அதில் காசியில் அற்புதமான அனுபவம் கிடைத்ததை அறிந்து மகிழ்ச்சியடைந்ததாக கூறினார்.

இத்தகைய பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.