Connect with us

செஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைக்கும் பிரக்ஞானந்தா!

samayam tamil 13

விளையாட்டு

செஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைக்கும் பிரக்ஞானந்தா!

செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் தொடர் இறுதி போட்டிக்கு தமிழக இளம்வீரர் பிரக்ஞானந்தா முன்னேறி உள்ளார்.

உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்றுள்ள செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. மொத்தம் ஒன்பது தொடர்களாக நடைபெறும் இந்த போட்டியில் சென்னையில் சேர்ந்த 16 வயதான பிரக்ஞானந்தாவும் பங்கேற்றுள்ளார்.

இதில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காலிறுதி சுற்றில் பிரக்ஞானந்தா 2.5-க்கு 1.5 என சீன வீரரை தோற்கடித்தார். இதனையடுத்து அரையிருதி வீரர் அனிஸ் கிரியை எதிர்கொண்டு இந்த சுற்றில் 2 க்கு 2 என்ற சமநிலையில் இருந்ததால் வெற்றியை தீர்மானிக்க பிளே அப் ஆட்டம் நடத்தப்பட்டது.

இதனையடுத்து அனிஷ் கிரியை வீழ்த்தி பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். அதே சமயம் மற்றொரு அரையுறுதி ஆட்டத்தில் உலகில் நம்பர் ஒன் வீரரை தோற்கடித்தார்.

மேலும், தற்போது செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் இறுதி போட்டியில் சீன வீரர் லிரனுடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in விளையாட்டு

To Top