தமிழனுக்கு வந்த சோதனை..! செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் போட்டியில் பிரக்ஞானந்தா தோல்வி…

உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்றுள்ள செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்நிலையில் தற்போது  இந்திய வீரர் பிரக்ஞானந்தா  இறுதி போட்டியில் கடுமையாக போராடி தோல்வியடைந்தார்.

செஸ்ஸபிள் மாஸ்டர் செஸ் போட்டி ஆன்லைன் முறையில் நடைபெற்றது. இப்போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றுள்ள செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரில் 16 வயதான பிரக்ஞானந்தாவும் பங்கேற்றுள்ளார்

இந்நிலையில் உலக போட்டியில் இரண்டாவது தரவரிசையில் இருக்கும் சீன வீரர் லிரனுடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மோதினார். முதல் நாள் ஆட்டத்தில் சீன வீரர் முன்னிலை வகித்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தில் பிரக்ஞானந்தா சிறப்பாக ஆடினார்.

இந்நிலையில் பகலில் 11 வகுப்பு பொதுத்தேர்வு இரவில் செஸ் விளையாட்டு என தொடங்கிய பிரக்ஞானந்தா செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா போராடி தோல்வியடைந்தார்.

மேலும், செஸ்ஸின் உலகில் நம்பர் ஒன் வீரர் மற்றும் நெதர்லாந்து வீரரை பிரக்ஞானந்தா வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment