தினகரனை சந்தித்தது ஏன்? எம்எல்ஏ பிரபு விளக்கம்

9c3e59bd6b8853c7ee8aa26470e256fd

இன்று காலை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ தினகரனை திடீரென அதிமுக எம்.எல்.ஏ பிரபு சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து இந்த சந்திப்பு குறித்து விளக்கமளித்து வருகிறார்.

அதிமுகவை வழிநடத்தவும், தலைமை தாங்கவும் சசிகலா மற்றும் தினகரனுக்கே திறமை உள்ளது. மக்கள் ஆதரவு தினகரனுக்குத் தான் உள்ளது. இதனை ஆர்.கே.நகர் தேர்தலில் இருந்து தெரிந்து கொண்டேன். தமிழகத்தை வழிநடத்த மக்கள் ஆதரவு பெற்ற தினகரன் பின்னால் செல்ல வேண்டும். தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் இருந்து யாராவது ஒருவர் முதல்வராக வர வாய்ப்பு உள்ளது

என்னால் தொகுதி பணிகளை என்னால் சரியாக செய்ய முடியவில்லை, நிறைய முட்டுக்கட்டைகள் உள்ளது. அதிமுகவில் இருந்து மக்கள் சேவையை சரிவர செய்ய முடியவில்லை. எம்எல்ஏவின் பணிகளை செய்வதற்கு மாவட்டத்திலேயே பல முட்டுக்கட்டை போடப்படுகிறதுஎன் பிரச்சினைகள் என்னவென்று முதலமைச்சருக்கு தெரியும். கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை –

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print