தன் படம் செய்த சாதனையை தானே முறியடித்து புது ரெக்கார்ட் செய்த பிரபாஸ்….!

பாகுபலி என்ற பிரம்மாண்ட படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் தான் நடிகர் பிரபாஸ். இப்படம் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். மேலும் பாகுபலி படத்தை தொடர்ந்து பிரபாஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் நடிக்க தொடங்கினார். அதேபோல் அவர் படங்களுக்கும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாக தொடங்கியது.

பாகுபலி

அந்த வகையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

ராதே ஷ்யாம்

முழுக்க முழுக்க ரொமாண்டிக் படமாக உருவாகி உள்ள இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படத்தின் டிரைலர் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. பான் இந்தியா படம் என்பதால் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளிலும் ராதே ஷ்யாம் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ராதே ஷ்யாம் படம் வெளியாகும் முன்பே புதிய சாதனையை படைத்துள்ளது. ஆம் இந்த படத்தின் டிரைலர் வெளியான 24 மணிநேரத்தில் 5 மொழிகளையும் சேர்த்து சுமார் 64 மில்லியன் பார்வைகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் கடந்த 4 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த பாகுபலி 2 பட சாதனையை தற்போது ராதே ஷ்யாம் படம் முறியடித்து உள்ளது.

அதுமட்டுமல்ல இந்த சாதனை மூலம் இந்தியளவில் ஒரே நாளில் அதிகமான பார்வைகளை பெற்ற டிரைலர் என்கிற சாதனையையும் ராதே ஷ்யாம் படத்தின் டிரைலர் படைத்துள்ளது. தனது படம் செய்த சாதனையை தனது மற்றொரு படம் மூலம் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ள நடிகர் பிரபாஸுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment