சென்னை சாலைகளை அலறவிட்ட புஜ்ஜி கார்…பிரபாஸ் படத்தில் இப்படி ஒரு அதிசயமா?

வழக்கமாக ஒரு படத்தினை புரோமோஷன் செய்ய வேண்டும் என்றால் அந்தப் படத்தில் நடித்துள்ள ஹீரோ ஹீரோயின்கள் ஒவ்வொரு பகுதியிலும் சென்று ரசிகர்களைச் சந்திப்பது வழக்கம். அல்லது அந்தப் படத்தில் முக்கியமாக இடம்பெற்றுள்ள சில பொருட்களை வைத்து சுற்றுப்பயணம் செய்து விளம்பரங்கள் செய்வது வழக்கம்.

அருணாச்சலம் படத்தில் ரஜினி நடித்த போது அவர் அணிந்திருந்த ருத்திராட்சத்தை மெகா சைஸில் உருவாக்கி தமிழகம் முழுவதும் விளம்பரப்படுத்தினர். அதேபோல் அம்மன் படத்தில் இடம்பெற்ற அந்த அம்மன் சிலையையே தமிழகம் முழுவதும் ஊர்வலமாகவும், தியேட்டர்களில் வழிபாட்டிற்காகவும் வைத்து விளம்பரம் செய்தனர்.

சமீபத்தில் கூட ஆதிபுரூஷ் திரைப்படத்திற்காக திரையரங்குகளில் ஹனுமனுக்காக ஒரு சிறப்பு இருக்கை ஒதுக்கி விளம்பரம் செய்யப்பட்டது. அதில் பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில் பிரபாஸின் அடுத்த படமான கல்கி கல்கி 2898 AD அவர் பயன்படுத்திய ஷுட்டிங் ரோபோ கார் விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட உள்ளது.

பிரபாஸ், தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்கும் கல்கி 2898 AD படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் கமல்ஹாசன், அமிதாப் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். ரோபோ அறிவியல் பின்னனியை வைத்து உருவாகும் இந்தப் படத்தில் ஆன்லைனில் நெட்டிசன்களைக் கவர்ந்த புஜ்ஜி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

திருட்டு விசிடியால் மரண அடி வாங்கிய ஜக்குபாய்.. இணையத்தில் லீக்-ஆகி பெட்டிக்குள் சுருண்ட சம்பவம்

புஜ்ஜி என அழைக்கப்படும் இந்த ரோபோ கார் இன்று சென்னையில் உள்ள வீதிகளில் வலம் வந்தது. மிகவும் வித்யாசமாக ஸ்டைலிஷாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்தக் கார் சென்னை சாலைகளில் வலம் வந்த போது பார்த்தவர்கள் அனைவரும் ஒருகனம் தங்கள் வாகனத்தை நிறுத்தி செல்பி எடுத்துக் கொண்டனர்.

ஆரஞ்சு வண்ணத்தில் பிரம்மிக்க வைக்கும் டிசைனில் உருவாக்கப்பட்ட இந்த கார் முற்றிலும் நவீன டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இந்தக் காரை சில ரேஸ் கார் வீரர் நரேன் கார்த்திகேயன், நாக சைதன்யா போன்றோர் ஓட்டியிருக்கின்றனர்.

கல்கி 2898 AD படம் ரிலீஸ் ஆக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் பான்இந்தியா படமான இதனை நாடு முழுவதும் விளம்பரப்படுத்த இந்த புஜ்ஜி ரோபோ கார் பயன்படுத்தப்பட உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...