பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’: டீசரில் உள்ள ஆச்சரியமான வசனங்கள்!

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸ் நடித்து முடித்துள்ள ராதே ஷ்யாம்’ என்ற படத்தின் டீசர் இன்று அவருடைய பிறந்த நாளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது

ஒரு நிமிடத்திற்கு மேலாக ஓடும் இந்த டீஸரில் அட்டகாசமான காட்சிகளில் உள்ளது என்பதும் அதேபோல் என் கணித ஜோதிடம் குறித்த வசனங்கள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த டீஸரில் இடம்பெற்ற வசனங்கள் பின்வருமாறு:

நீ யாருன்னு எனக்கு தெரியும்
ஆனால் உன்னிடம் நான் சொல்ல மாட்டேன்

உன் இதயம் உடைந்த சத்தம் எனக்கு கேட்கும்
ஆனால் உன்னிடம் நான் சொல்ல மாட்டேன்

உன் தோல்வியை என்னால் பார்க்க முடியும்
ஆனால் உன்னிடம் நான் சொல்ல மாட்டேன்

உன் மரணத்தின் வாசனையை என்னால் நுகர முடியும்
ஆனால் உன்னிடம் நான் சொல்ல மாட்டேன்

எல்லாம் எனக்கு தெரியும்
ஆனாலும் சொல்ல மாட்டேன்

ஏனென்றால் என்னை உன்னால் புரிந்துகொள்ள முடியாது
என் பேரு விக்கிரமாதித்தா
நான் கடவுளும் இல்லை
உன்னை மாதிரியும் இல்லை

பிரபாஸ் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் இருபத்தி இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment