‘சக்திவாய்ந்த நிலநடுக்கம்’…. புரண்டது புல்லட் ரயில்- 2 பேர் உயிரிழப்பு!
பொதுவாக இயற்கை பேரழிவு என்பது யாரும் எதிர்பார்க்காத நேரத்தின் போதுதான் ஏற்படும். அதுவும் குறிப்பாக நிலநடுக்கமானது தற்போது உலக நாடுகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஏற்பட்டுக் கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு திடீரென்று ஜப்பான் நாட்டில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இரண்டு பேர் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜப்பானின் புகுஷிமா கடற்கரை அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தின் காரணமாக 2 பேர் உயிரிழந்தனர்.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் 90 பேர் காயமடைந்தனர். சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் டோக்கியோவில் வீடுகள், கட்டடங்கள், குலுங்கியதால் மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மின்சார சேவை நின்று போனதால் சுமார் 20 லட்சம் மக்கள் இருளில் மூழ்கினர். சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக மியாகி அருகே ஷிரோஷியில் சென்று கொண்டிருந்த புல்லட் ரயில் தடம் புரண்டது.
