Connect with us

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 155 பேர் பலி!

Capture 14

News

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 155 பேர் பலி!

கடந்த சில நாட்களாகவே நிலநடுக்கம் மண்சரிவு போன்ற இயற்கை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 155 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் தென்கிழக்கு கோஸ்ட் உள்ளிட்டப்பகுதிகளில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக ரிக்டர் அளவில் 6.1 வரையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்நாட்டில் இதுவரையில் 155 பேர் நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்து இருப்பதாகவும், 250-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்து இருப்பதாக அந்நாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே அந்நாட்டின் உயிர் சேதங்கள் மற்றும் பொருட்சேதங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், நிலநடுக்கத்தால் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணியானது தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top