
செய்திகள்
சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 4 பேர் பலி!!
சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாறைகள் சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள சிச்சுவான் என்ற நகரத்தில் நேற்றுமாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. குறிப்பாக ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் குழுங்கின.
இந்நிலையில் செங்டு, சாங்குவிங், லூஷான் ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனிடையே சில நிமிடங்களில் இரண்டாவது முறையாக 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் போஸிங் என்ற மலைப்பகுதியில் ஏராளமான பாறைகள் உருண்டு அந்த பகுதியில் சென்ற வாகனங்கள் மீதும் அருகில் இருந்த வீடுகள் மீதும் விழுந்தது.
இதனிடையே பாறைகள் உருண்டு ஓடியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே போல் 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். தற்போது அங்கு மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
