மீண்டும் மின் தட்டுப்பாடு: வெளியான அதிர்ச்சி தகவல் !!

கடந்த சில நாட்களாகவே நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் வினியோகம் பாதிக்கப்பட்ட நிலையில் வருகின்ற ஜூலை முதல் ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் மீண்டும் மின்வினியோகம் பாதிக்கப்படும் என அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 173 அனல் மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையில் தற்போது போதிய நிலக்கரி கையிருப்பு இல்லாத காரணத்தினால் இம்மாதிரியான அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருகின்ற ஒரு மாதத்திற்குள் மின்சார தட்டுப்பாடு நிலவும் என எரிசக்தி மற்றும் சுத்தமான காற்றுக்கான ஆராய்ச்சி மையங்கள் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே நிலக்கரி கையிருப்பு மற்றும் விநியோகம் குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம் என்ற காரணத்தினால் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும், பருவமழையின் காரணமாக நிகக்கரியை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அனல் மின் நிலையங்களுக்குப் நிலக்கரி கொண்டு செல்வது மற்றும் கொள்முதல் செய்வதில் தாமதல் ஏற்பட்டுள்ளதால் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment