தற்போது நம் இந்தியாவில் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது மின்சார கட்டணம்தான். ஏனென்றால் ஒவ்வொரு மாநிலங்களிலும் மின்சார கட்டணமானது சற்று உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நம் தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மின்சார கட்டணம் உயர்த்தப்படும் என்று தற்போதைய மின்வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் நாடாளுமன்றத்தில் மின்வாரியத்துறை அமைச்சர் இது குறித்து பேசப்படும் போது எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் அமலில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் உரையின் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இவ்வாறு உள்ள நிலையில் குறிப்பிட்ட 13 மாநிலத்தில் மின்சார வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.
மின்பகிர்மான நிறுவனங்கள் ரூபாய் 5085 கோடி கடன் பாதியை தொகையை செலுத்த தவறியதால் 13 மாநிலங்கள் மின்சாரம் வாங்க விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு, ஆந்திரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் மின்சாரத்தை வாங்கவோ விற்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
பில் தயாரிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் வரை தொகையை செலுத்த அவகாசம் அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவகாசம் கடந்தும் செலுத்த காரணத்தால் 13 மாநிலங்களில் உள்ள 27 மின் பகிமான நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கையால் 13 மாநிலங்களில் மின்தடை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.