Connect with us

மின் கட்டண உயர்வு திரும்பபெற விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம்

powerloom

தமிழகம்

மின் கட்டண உயர்வு திரும்பபெற விசைத்தறி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டம்

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை திரும்பபெற வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்…

தமிழக அரசின் மின்சார துறை சார்பில் மின் கட்டண உயர்வு அறிவித்துள்ளது. இதன் காரணமாக அனைத்து தொழில் துறையினரும் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், ஜவுளி உற்பத்தி சார்ந்த விசைத்தறி தொழில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் தமிழகம் முழுவதும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் முடிவில் மின்சார கட்டண உயர்வு அனைத்து விசைத்தறி உரிமையாளர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்கட்டணம் செலுத்தப்படுவதால் சராசரி ஒரு விசைத்தறி உரிமையாளர் 8ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை மின்கட்டணம் அதிகப்படியாக செலுத்த வேண்டியது வரும் என்றும்,

ஏற்கனவே விசைத்தறி தொழில் விசைத்தறி உற்பத்தியின் மூலப் பொருளான நூல் விலை ஏற்றதால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தற்போது மின் கட்டண உயர்வு கூடுதலாக விசைத்தறி உரிமையாளர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தி உள்ளதாக கூறினர். இதனால் தமிழக அரசு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் வருகின்ற 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 25ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தி வைக்கப்படுவதுடன் ஜவுளி தொழில் சார்ந்த அனைத்து தொழில்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதன் மூலம் நாள் ஒன்றுக்கு 50கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது…

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top