ரம்ஜான் நாளில் சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படத்தின் பாஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அந்த பாடல் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய ‘மாநாடு’ திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் ரம்ஜான் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன்சங்கர்ராஜா சிம்பு மீண்டும் இணையும் இந்தப் பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தாயார் காலமானார்
இதனை அடுத்து அந்த சோகத்தில் பங்கு கொள்ளும் வகையில் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாகவும், புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இது குறித்து சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நம் இஸ்லாமிய உறவுகள் கொண்டாடும் ரம்ஜான் தினத்தன்று வெளியிடுவதாக இருந்த நமது#மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நமது இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களின் தாயார் மறைவின் வருத்தத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு இன்னும் சில நாட்கள் தள்ளி வெளியாக உள்ளது என்பதை வருத்தமுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னொரு தேதியில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடுவோம். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். நண்பர்களின் துக்கத்தில் பங்குகொள்வோம்.
இன்னொரு தேதியில் first’sigle வெளியிடுவோம். அதற்கான அறிவிப்பை விரைவில் தெரிவிப்போம். நண்பர்களின் துக்கத்தில் பங்குகொள்வோம்.
கொண்டாட்டத்தையும் தாண்டி கவனமாக இருங்கள். விரைந்து மீள்வோம். நன்றி சகோதரர்களே @SilambarasanTR_ @vp_offl @kalyanipriyan @iam_SJSuryah @Richardmnathan
— sureshkamatchi (@sureshkamatchi) May 11, 2021