ஜனவரி 5ஆம் தேதி தமிழகத்தில் எதிர்பாராத விதமாக பல அறிவிப்புகள் வெளியானது. அவற்றுள் ஒன்றுதான் ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியது. ஆயினும் ஊரடங்கு காலத்தில் போட்டித் தேர்வுக்கு நடத்த அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இந்தநிலையில் டிஎன்பிஎஸ்சி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த தேர்வை ஒத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணி கள் பதவிகளுக்கான தேர்வு 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த தேர்வு செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டை பயன்படுத்தி தேர்வர்கள் தேர்வு எழுதலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்தாதவர்கள் வணிக வளாகங்கள், திரையரங்குகளிலும் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற உள்ள கட்டடக்கலை, திட்ட உதவியாளர் பதவிக்கான எழுத்து தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. தேர்வு ஒத்திவைப்பு குறித்து டிஎன்பிஎஸ்சி கட்டுப்பாட்டு அதிகாரி கிரன் குராலா அறிவித்துள்ளார்.