திடீர் ரத்து! தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த ஒத்திவைப்பு!!

தமிழகத்தில் நாளை நடைப்பெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி திடீர் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் சார்பில் நாளை நாற்பத்தி நான்கு இடங்களில் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அதேசமயம் 6 இடங்களில் அனுமதி இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணி நடத்துவது ஒத்திவைக்கப்படுவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மாணவி சத்யா கொலை வழக்கு: இளைஞர் மீது குண்டாஸ்!

அதன் படி, 97 ஆண்டுகளாக ஊர்வலங்களை அமைதியான முறையில் நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ள ஆர்எஸ்எஸ் அக்டோபர் 2ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்த தமிழக அரசின் காவல் துறையிடம் மனு கொடுத்தகாக தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் மனு மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றம் சென்றதாகவும், அப்போது நேற்று வந்த தீர்ப்பில் அணிவகுப்பு ஊர்வலத்தை உள் அரங்கிலோ, அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்துமாறு நீதிமன்றம் கூறியிருப்பது எங்களுக்கு ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ளனர்.

உச்சம் தொட்ட தங்கம் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

இதனால் சட்ட ரீதியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதால் நவம்பர் 6ம் தேதி நடக்க இருந்த ஊர்வலத்தை ஒத்திவைக்கப்பதாக தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment