கோலாகல ஏற்பாடுகள் அனைத்தும் வீண்! மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா ஒத்திவைப்பு!

இந்த ஆண்டு நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் விழாவில் கலந்து கொள்வார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். அதன்படி ஜனவரி 12ஆம் தேதி மதுரையில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மோடி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

annamalai bjp

தற்போது பாஜக தரப்பு மத்தியில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி மதுரையில் வரும் 12ஆம் தேதி நடைபெற இருந்த பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொங்கல்விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 12ஆம் தேதி மதுரையில் பாஜக கட்சியின் சார்பில் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஒமைக்ரான் பரவல் காரணமாக ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தகவல் அளித்துள்ளார்.

ஆயினும் மற்றொரு நாளில் பொங்கல் விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார். விருதுநகரில் வருகின்ற 12ஆம் தேதி மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா நடைபெற உள்ளது என்றும் அண்ணாமலை கூறினார். இந்த மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாகவும் அவர் தகவல் அளித்துள்ளார். மருத்துவ கல்லூரி விழாவில் பிரதமர் பங்கேற்பது குறித்து மாநில அரசுதான் அறிவிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment