ஜவுளி மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வு தள்ளிவைப்பு!- ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு;

இந்தியாவில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் தற்போது ஜி.எஸ்.டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது இதனால் அனைத்து பொருட்களின் விலையும் சற்று அதிகமாகவே உயர்ந்து காணப்படுகிறது. இவை வர்த்தகர்கள், நுகர்வோர் என பலருக்கும் பெரும் இன்னல் ஆகவே காணப்படுகிறது.

இந்த நிலையில் ஜவுளி மீதான ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த முடிவினை தள்ளி வைக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ஜவுளி மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வு தள்ளி வைக்க உள்ளதாக ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஜவுளி மீதான ஜி.எஸ்.டி வரியை உயர்த்த கூடாது என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஏற்கனவே நூல், நெசவு பொருட்களின் விலை உயர்வே ஜவுளித் துறையில் உள்ளவர்களை பெரும் பாதிப்பிற்கு தள்ளியுள்ளது. எனவே பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு அதிகரித்ததை அடுத்து ஜவுளி மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வை தள்ளி வைத்தது ஜி.எஸ்.டி கவுன்சில்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment