அனைத்து பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு! மீண்டும் தேர்வு எப்போது? அடுத்த அடுத்த அப்டேட் கொடுக்கும் பொன்முடி;

தமிழகத்தில் ஜனவரி 20-ந்தேதி வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 21-ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் சந்தோஷத்தில் இருந்த நிலையில் தமிழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மேலும் மகிழ்ச்சியான தகவல் அறிவித்துள்ளார்.

அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் பல்கலைக் கழக தேர்வுகள் அனைத்தும் ஒத்துழைப்பு என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.

கல்லூரிகளில் செய்முறை தேர்வுகள் மட்டும் நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். பல்கலைக் கழக தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து தேர்வு தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு அறிவிக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கூறினார். மாணவர்கள் நலன் கருதி தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.

அதோடு மட்டுமல்லாமல் எந்தக் கல்லூரியிலும் நேரடி வகுப்புகள் நடத்தப் படவில்லை. ஒருவேளை நேரடி வகுப்புகள் நடத்தப் படுவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள விடுமுறையை பயன்படுத்தி மாணவர்கள் தேர்வுக்கு தயாராக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment