2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெரும்பாலான பள்ளி கல்லூரிகளில் ஆன்லைன் தேர்வுகளை அதிகமாக நடைபெற்றது. இதனால் நடக்கின்ற செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடத்த வேண்டுமென்று மாணவர்கள் போராட்டம் செய்தனர். ஆனால் தமிழகத்தில் உள்ள பெருவாரியான அனைத்துக் கல்லூரிகளும் ஆன்லைன் தேர்வுகள் நடைபெறாது என்று கூறியிருந்தது.
இதற்காக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சென்னை பல்கலைக்கழகத்தில் ஜனவரி 21ம் தேதி நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 20ஆம் தேதி வரை நம் தமிழக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 21ஆம் தேதி முதல் தொடங்க இருந்த அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் சென்னை பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.
கொரோனா பரவலை கருத்தில்கொண்டு தேர்வை ஒத்திவைத்தது. தள்ளிவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகளை எப்போது நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் இத்தகைய முடிவு மாணவர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.