Connect with us

தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு பாதக நிலை; தள்ளிப்போனது வழக்கு விசாரணை!!

ops

செய்திகள்

தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு பாதக நிலை; தள்ளிப்போனது வழக்கு விசாரணை!!

கடந்த மாதம் இறுதியில் சென்னை வானரகத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாதியிலேயே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர்.

மேலும் அடுத்த பொதுக்குழு கூட்டத்திற்கு நடத்த தடைவிதித்தும் வழக்கு தொடுத்திருந்தனர். ஆயினும் ஜூலை பதினோராம் தேதி மீண்டும் அதே இடத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார்.

இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கை மேல்முறையீடு செய்து உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தது. இந்த நிலையில் அதிமுக பொது குழுவுக்கு எதிரான ஒ.பன்னீர்செல்வத்தின் மனுவை வருகின்ற 29ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கிறது என்றும் தெரிகிறது. பதினோராம் தேதி அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி தந்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

வழக்கு நாளை விசாரிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை பட்டியலிடப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top