Tamil Nadu
இலங்கையில் 4 மீனவர்களின் போஸ்ட்மார்ட்டம்: இன்று உடல்கள் வருகை!
சமீபத்தில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியதில் 4 மீனவர்கள் பரிதாபமாக பலியானார்கள் என்பதும், இதனை அடுத்து இலங்கை அரசுக்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன என்பதும் குறிப்பிடத்தக்கது
நடுக்கடலில் கொல்லப்பட்ட மீனவர்களால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன
இந்த நிலையில் நடுக்கடலில் கொல்லப்பட்ட மீனவர்களின் உடல்கள் இலங்கையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 4 மீனவர்களின் உடல்கள் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
4 நாலு மீனவர்களின் உடல்கள் இந்தியா வரவிருப்பதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்ற குரல்கள் மீனவர்கள் மத்தியில் ஓங்கி ஒலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
