Connect with us

அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்பு: சேர்க்கை பதிவு இன்று துவக்கம்!!

மாணவர்கள்

தமிழகம்

அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்பு: சேர்க்கை பதிவு இன்று துவக்கம்!!

தமிழகத்தில் இன்று முதல் அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் முதுநிலை பட்டப் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் முதுநிலை பட்டப் படிப்புக்கான ஆன்லைன் பதிவு நடைப்பெறாமல் இருந்து வந்தது. இதனால் நடப்பாண்டிலும் நடைப்பெறுமா? என்ற சந்தேகம் மாணவர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்த நிலையில் தமிழ் நாட்டில் இருக்கும் 163 அரசு கல்லுாரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் சேரலாம் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதற்கு www.tngasapg.in என்ற இணையதளத்தில் தொடங்கியுள்ளது.

அதே போல் வருகின்ற செப்டம்பர் 16-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்றும் இணையதள வாயிலாக தரவரிசைப்பட்டியல் 20ம் தேதி வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை 21ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை துவங்கப்படும் என ல்லுாரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top