
தமிழகம்
சுவரொட்டி ஒட்டியவர்களுக்கு ரூ.99,400 அபராதம்: சென்னை மாநகராட்சி அதிரடி!!
தமிழகத்தில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதால் சுற்றுச்சூழல் பெரிதும் மாசடைகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை கொண்டுவந்துள்ளது.
குறிப்பாக பொதுஇடங்களில் குப்பைகளை கொண்டினால் அபராதம் விதிக்கப்படுவது மட்டுமில்லாமல் நடவடிகை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அண்மையில் கூறியது.
இதனிடையே பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்களில் கடந்த இரண்டு வாரங்களாக குப்பை மற்றும் கட்டுமான கழிவுகள் கொண்டியதாக ரூ.15 லட்சத்து 18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பொது இடங்களில் குப்பை, கட்டுமான கழிவுகள் மற்றும் சுவரொட்டி ஒட்டுபவர்களுக்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. குப்பை கொட்டியதாக 6.47 ஆயிரம் ரூபாயும், கட்டுமான கழிவுகள் கொட்டியவர்கள் மீது 7.71 ஆயிரம் ரூபாயும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சுவரொட்டி ஒட்டியவர்களிடமிருந்து ரூ.99,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சிக்கு கூறியுள்ளது.
