பத்தாம் வகுப்பு போதும்! 40,000 காலியிடங்கள்.. போஸ்ட் மாஸ்டர் பணிக்கு உடனே விண்ணப்பியுங்கள்..!

நாடு முழுவதிலும் உள்ள தபால் நிலையங்களில் 40,000 போஸ்ட் மாஸ்டர் பணிகள் காலியிடங்கள் இருக்கும் நிலையில் அந்த காலியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதில் தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 3167 கிராம அஞ்சல் பணிகளுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு தகுதி உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியின் விபரங்கள் இதோ:

பணியின் பெயர்: கிளை போஸ்ட் மாஸ்டர்

காலியிடங்கள்: நாடு முழுவதும் 40,889, தமிழகத்தில் மட்டும் 3,167

சம்பளம்: கிளை போஸ்ட் மாஸ்டர் – ரூ.12,000 முதல் 29,380 வரை
உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர்: ரூ. 10,000 முதல் 24,470/- வரை

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு

வயது வரம்பு: 18-40

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 16

விண்ணப்பிக்கும் முறை: indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் அஞ்சல் வட்டத்தை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...