
செய்திகள்
நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவு: டெய்லர் படுகொலை!!
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சமூக வலைதளத்தில் பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தையல் தொழிலாளி ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் உதய்பூரில் உள்ள கண்னையா லால் என்பவரின் கடைக்கு கத்தி மற்றும் வாளுடன் சென்ற சிலர் பட்டப்பகலில் கடைக்காரரை கொடூரமாக தலை துண்டித்து கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே உயிரிழந்த கண்னையாவுக்கு சில நபர்களிடம் இருந்து கொலை மிரட்டம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசம்பாவிதங்களை தடுக்க உதய்பூரில் இணையதளம் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், கண்னையாவை கொலை செய்த குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
