whatsapp -யில் ஸ்டேட்டஸ் வைத்தால் புகார் கொடுக்கலாமா? புதிய வசதி..

உலகெங்கிலும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் whatsapp செயலியில் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதியை பெரும்பான்மையோர் பயன் படுத்தி வருகின்றனர்.தினந்தோறும் ஸ்டேட்டஸ் வைப்பதை ஒரு வேலையாகவும் சிலர் செய்து வருகின்றனர்.

குறிப்பாக 25 வயதிற்கு உட்பட்டவர் whatsapp ஸ்டேட்டஸ் வசதியை அதிகமாக பயன் படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வன்முறையை தூண்டும் விதமாக whatsapp ஸ்டேட்டஸ் வைக்கப்பட்டால் பயனாளர்கள் அது குறித்து whatsapp நிறுவனத்திற்கு புகார் அளிக்கும் புதிய வசதி அப்டேட் செய்யப்பட உள்ளது.

whatsapp ஸ்டேட்டஸ் மூலம் தனி நபர்களை தரக்குறைவாக விமர்சித்து பெண்களை அவதுருவாக பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் புகார் அளிக்கலாம் என whatsappன் தாய் நிறுவனமான metta தெரிவித்துள்ளது.

அப்படி வரும் புகார்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பிறகு தொடர்புடைய ஸ்டேட்டஸ் நீக்கப்படும் என metta தெரிவித்துள்ளது.

மீண்டும் கொரோனா பரவல்! புத்தாண்டு கொண்டாட தடை!

மேலும் பயனாளர்கள் அனுப்பும் செய்திகள் படங்கள் காணொளிகள் செய்திகள் உரையாடல்கள் அனைத்தும் whatsapp உட்பட யாவரும் குறுக்கிட முடியாது என metta உறுதியளித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.