கடந்த ஆண்டு தொடங்கிய வடகிழக்கு பருவமழையை அவ்வளவு எளிதாக அனைவராலும் மறக்க முடியாது. ஏனென்றால் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதி முதல் தமிழகத்திற்கு அதி தீவிர கனமழை கிடைத்தது. குறிப்பிட்ட சில நாட்களில் தமிழகத்தில் உள்ள பெருவாரியான மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் ஒதுக்கப்பட்டது.
ஏனென்றால் வங்க கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அதோடு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும் தமிழகத்தில் கன மழை பெய்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன்படி மீண்டும் வங்கக்கடலில் ஜனவரி 9ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. ஜனவரி 9ஆம் தேதி உருவாக உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. ஏற்கனவே தென் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.