Connect with us

அதிரடி அறிவிப்பு….. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கட்சியில் பதவி!!

காங்கிரஸ்

செய்திகள்

அதிரடி அறிவிப்பு….. ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கட்சியில் பதவி!!

இந்தியாவின் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய கட்சியாக இருந்தது காங்கிரஸ். ஆனால் பல கட்சிகளின் வரத்தின் காரணமாக மெல்ல மெல்ல காங்கிரஸின் பலமும் குறைந்து கொண்டே வந்தது.

இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் வெறும் இரண்டு மாநிலங்களில் மட்டும் ஆட்சி செய்யும் கட்சியாக காணப்படுகின்றது. அதுவும் குறிப்பாக காங்கிரஸ் கையில் இருந்த பஞ்சாப் மாநிலம் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் சென்றது.

ஆம் ஆத்மி பஞ்சாப் மாநிலத்தில் வெற்றி பெற்று அங்கு ஆட்சி செய்து கொண்டு வருகிறது. இதனால் அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விதமான அதிரடி உத்தரவுகளை திட்டங்களையும் அறிவித்தனர்.

இந்த நிலையில் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்று அறிவித்துள்ளது. அதன்படி ஒருவருக்கு ஒரு பதவி, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்று காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

ஒரு குடும்பத்தில் இரண்டாவது நம்பர் போட்டியிட கட்சியில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்றும் தீர்மானம் செய்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரு பொறுப்பை வகிக்க கூடாது எனவும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சிப் பொறுப்புகளில் சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு 50% வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் காரிய கமிட்டி திட்டவட்டமாக கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top