
Tamil Nadu
கோவில் திருவிழாக்களில் ஆபாச வார்த்தைகளோ, நடனங்களோ கூடாது-ஹைகோர்ட்;
தற்போது நம் தமிழகத்தில் கோவில் திருவிழா சீசன் என்று கூறலாம். சித்திரைக்கு பிறகு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். திருவிழாக்கள் என்றால் அங்கு ஆடல் பாடல் நிகழ்ச்சி கட்டாயம் இருக்கும்.
இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைகோர்ட் சில விதிமுறைகளை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக கோவில் திருவிழாவில் ஆபாச நடனம் இருக்க கூடாது என்று திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.
கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் வார்த்தைகள், ஆபாச நடனங்கள் இருக்கக்கூடாது என்று ஹை கோர்ட் கூறியுள்ளது. ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகளோ ஆபாச நடனங்களோ இருந்தால் நிகழ்ச்சியை போலீஸ் உடனே நிறுத்தலாம் என்றும் கூறியுள்ளது.
கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி 100க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுக்களை விசாரித்த ஐகோர்ட் கிளை நீதிபதி தமிழ்ச்செல்வி பல நிபந்தனைகளை விதித்து ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தார்.
