பிரபல யூடியூபர்,விஜே நிக்கி தலைமறைவு! அப்படி என்ன நடந்திருக்கும்…

பிரபல தனியார் யூடியூப் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் நிக்கிலேஷ், இவரை இவரது ரசிகர்கள் மற்றும் அனைவரும் நிக்கி என அழைப்பது வழக்கம்.

தற்போழுது இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நேற்று சென்னையில் உள்ள புரசைவாக்கம் பகுதியில் காரில் சென்றுள்ளார்.

அப்போது எதிரே வந்த ராஜேஸ் என்பவருக்கும் இவருக்கும் வழிவிடுவதில் வாய் தகராறு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியாதால் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.அப்போது ஒருவரை ஒருவர் மாறி மாறி சரமாரியாக தாக்கிக்கொண்டுள்ளனர்.

இதில் நிக்கிக்கு முகத்திலும் கண் புருவத்தில் காயங்கள் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதே போல ராஜேஸ்க்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் குறித்து வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொகுப்பாளர் நிக்கி மீதும் ராஜேஸ் மீதும் கொலை மிரட்டல் விடுதல் ,ஆபாசமாக பேசுதல் ,பிறரை தாக்குதல் காயங்கள் ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய விசாரணை மேற்கொள்ள போலீசார் திட்டமீட்டுள்ளனர்.

மற்ற காதலர்கள் பொறாமை படும் வகையில் காதலை சொல்ல வானத்தில் பறந்த காதலன்! வைரல் வீடியோ!

ஆனால் தற்போழுது தொகுப்பாளர் நிக்கி தலைமறைவாக இருப்பதாக போலீசார் தரப்பில் குறிப்பிடுகிறது.அவர் மீது வழக்கு பதிவான நிலையில் தலை மறைவானதாக குறிப்பிடுகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.