
செய்திகள்
பிரபல பாடகர் கே.கே மரணம்: பிரதமர் மோடி இரங்கல் !!
இந்தியாவில் பிரபல பாடல்களை பாடி ஹிட் கொடுத்தவர் கிருண்குமார் குன்னாத். இவர் தமிழ் சினிமாவில் அஜித், சூர்யா, விஜய் ஆகியோர் நடித்திருந்த படங்களில் பாடி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தார்.
இந்நிலையில் நேற்று கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி பங்கேற்ற அவர் பின்பு ஹோட்டலுக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது திர்பாராத விதமாக மரைடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அமர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இவர் கடந்த 1999-ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஒரு பாடல்களையும் பாடியுள்ளார். சினிமாவிற்கு என்ட்ரி கொடுப்பதற்கு முன்பே 3,500-க்கும் மேற்பட்ட விளம்பர பாடல்களை இவர் பாடியுள்ளார். குறிப்பாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மூலம் காதல் தேசம் திரைப்படத்தில் பாடி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.
இந்த சூழலில் இவருடைய மரணத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் பிரபல பாடகர் கேகே என்று அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத்தின் அகால மறைவு வருத்தமளிப்பதாக கூறியுள்ளார்.
அதோடு அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பலவிதமான உணர்ச்சிகளை பிரதிபலிப்பதாவும் இவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கை தெரிவித்து கொள்வதாக கூறினார்.
Saddened by the untimely demise of noted singer Krishnakumar Kunnath popularly known as KK. His songs reflected a wide range of emotions as struck a chord with people of all age groups. We will always remember him through his songs. Condolences to his family and fans. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) May 31, 2022
