விஜய்யின் த.வெ.க கட்சியில் இணைந்த பிரபல நடிகரின் மகன்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய், கடந்த சில தினங்களுக்கு முன்பாக திடீரென அரசியலில் நுழைவதாக அறிவித்து தனது கட்சி பெயரையும் இது தொடர்பான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

முன்னதாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களைப் போல விஜய் அரசியலுக்கு வருவது பற்றிய செய்தியே கடந்த சில ஆண்டுகளாக பரவலாக ஒரு கருத்து இருந்து வந்தது. இதற்கு மிக முக்கிய காரணம் தான் நடிக்கும் திரைப்படங்களில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகளையும், சமூக வலைதளங்களிலோ அல்லது நேரடியாகவோ சில அரசியல் பிரச்சனைகள் குறித்த கருத்துக்களையும் விஜய் பதிவிட்டு வந்தது தான்.

இது தவிர நலத்திட்டங்கள் என விஜய் செய்த பல விஷயங்கள் அவர் அரசியலிற்கு விரைவில் வருவார் என்ற சமிக்ஞையை கொடுத்திருந்தது. ஆனால் இந்த அளவுக்கு விரைவாக வருவார் என்று யாரும் எதிர்பார்க்காத நிலையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் அதிரடி என்ட்ரியை கொடுத்திருந்தார் விஜய்.

தொடர்ந்து சமூக பிரச்சனைகளுக்காக விஜய் குரல் கொடுத்து வந்த நிலையில், தற்போது அரசியலிலும் நுழைந்துள்ளதால் அதே பாணியை நிச்சயம் விஜய் பின்பற்றுவார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி போட்டியிடாமல் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டும், விஜய் களமிறங்குவதாக தனது அறிக்கையிலேயே குறிப்பிட்டு இருந்தார்.

அரசியலில் நுழைந்ததால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தாலும் அவர் திரைப்படங்களில் பெரிதாக கவனம் செலுத்த மாட்டார் என தெரிவித்துள்ள கருத்து சில ரசிகர்களை சற்று கலங்க தான் வைத்துள்ளது. இதற்கிடையே சமீபத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அனைவரும் உறுப்பினராக இணைந்து கொள்வதற்காக செயலியையும் வெளியிட்டு அதில் எப்படி நுழைய வேண்டும் என்ற வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார்.

இதுவரை ஏறக்குறைய 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த கட்சியில் இணைந்துள்ள நிலையில், தற்போது முன்னணி நடிகரான நாசரின் மகன் நூருல் ஹுசைன் ஃபைசல் இந்த கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பான ஒரு பதிவை நாசரின் மனைவியான கமீலா, தனது எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
Image

பிரபல நடிகரின் மகனே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் உறுப்பினராக இணைந்துள்ளது, தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி கவனம் பெற்றுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...