ஆபாச படம் பார்ப்பவர்களே உஷார்!! Pop-up’ மெசேஜில் மோசடி…!!

இந்தியாவில் ஆபாச படம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என்று அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இருப்பினும், இத்தகைய சம்பவங்கள் ஒரு புறம் தலைதூக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் ராக்கேஷ் என்பவர் பொறியில் படிப்பை படித்து வந்துள்ளார். இந்த சூழலில் இணையதளத்தில் ஆபாச படம் பார்த்தபோது Pop-up என்ற மெசேஜ் வந்துள்ளது.

அதில் ஆபாச படம் பார்ப்பது சட்டப்படி குற்றமாகும் இத்தகைய சம்பவத்திலிருந்து தப்ப வேண்டும் என்றால் ஆறு மணி நேரத்திற்குள் ரூபாய் 25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று மெசேஜ் வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இணையத்தில் சோதித்தபோது அது போலியானது என்பதை கண்டுப்பிடித்தார். உடனடியாக டெல்லி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பின்னர் விசாரணை நடத்தியதில் சென்னையில் இருந்து 2 பேர் ஏஜட்டாக இருந்தது தெரியவந்துள்ளதையடுத்து அவர்களை கைது செய்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment