தமிழ், தெலுங்கு, மளையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை பூனம் கவுர். இவர் ‘நெஞ்சிருக்கும் வரை’ என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பி கிடைத்தது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வெடி, ஆறு மெழுகுவர்த்திகள், அச்சாரம் மற்றும் உன்னைப்போல் ஒருவன் போன்ற படங்களில் நடித்த இவருக்கு தமிழில் படவாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது.
இதனால் தெலுங்கு சினிமாவில் எண்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் நாதிச்சராமி என்ற படம் ரிலீசுக்கு தாயாராகி வருகிறது.
இந்நிலையில் நடிகை பூனம் கவுர் ஃபைப்ரோமியால்ஜியா (Fibromyalgia ) என்ற ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நோயினால் உடல் வலி, சோர்வு, தூக்கம், நினைவாற்றல் போன்றவைகள் பாதிக்கப்படும் என கூறியுள்ளார்.
அதோடு கடந்த 2 வருடங்களாக இத்தகைய நோயினால் அவதியடைந்து வருவதாகவும், தற்போது கேரளாவில் சிகிச்சை பெற்று வருவதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.