பூஜைகளில் சாம்பிராணி புகை காட்டுவது ஏன்?!

be6518e7974e8740c850e76a55695147

வாசம் மிகுந்தது சாம்பிராணி. இந்த சாம்பிராணியை, பூஜை செய்யும் போது நெருப்பில் போட்டு புகையை விட்டு இறைவனுக்கு காட்டுவார்கள். பெண்கள், குழந்தைகள் தலைக்கு குளித்து வந்தபின் தலையில் ஈரம் சேராமல் இருக்கவும், கூந்தல் வாசமாய் இருக்கவும் சாம்பிராணி புகை போடுவது நம் முன்னோர்களின் வழக்கம். கேஸ் அடுப்பு வந்தபின் விறகு அடுப்பு காணாமல் போனது. அதனால் நெருப்பு கங்கு கிடைக்காமல் சாம்பிராணி புகை போடுவது வழக்கொழிந்து போனது. கம்ப்யூட்டர் சாம்பிராணி எனப்படும் இன்ஸ்டண்ட் சாம்பிராணி வந்தாலும் வீடு முழுக்க சாம்பிராணி போட்ட பலன் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

பாறைப்போல் இறுகி கிடக்கும் சாம்பிராணி கட்டிகள், தீயில் பட்டவுடன் புகையாகிப் போகிறது. அதுபோல், மனிதனின் பூதாகாரமாக, மிகக் கடினமாக கிடக்கும் துன்பங்கள் எல்லாம், அக்னி உருவாக உள்ள இறைவனின் அருள் கடாட்சம் கிடைத்தவுடனே, புகையைப் போன்று லேசாகி விலகிவிடும். இதை உணர்த்துவதே சாம்பிராணியை பூஜைகளில் பயன்படுத்துவதன் நோக்கம். சாம்பிராணியை பூஜைகளில் ஏன் பயன்படுத்துகிறோம் என்பதற்கு ஒரு கதை இருக்கின்றது.

கூரத்தாழ்வானின் திருமகனார் பராசர பட்டர். இவர் ஸ்ரீராமானுஜருக்குப் பிறகு வைணவ உலகின் தலைமை பொறுப்பில் திகழ்ந்தவர். இவர், இறைவனுக்கு எந்த புகையும், பூவும் சமர்ப்பிக்கலாம், கண்டகாலிப் பூவும் சூட்டலாம் என்று உரை அளித்தார். இதை கேட்டுக்கொண்டிருந்த சீடர் ஒருவருக்கு வருத்தம் ஏற்பட்டது. ‘இறைவனுக்கு வாசனை மிகுந்த பூக்களும் புகையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறும்போது, நீங்கள் இப்படி உரை செய்யலாமா?” என்று கேட்டுவிட்டார். அதற்கு பட்டர், இறைவன் எனக்கு இதைத்தான் நீ சூட்ட வேண்டும், காட்ட வேண்டும் என்று விதிக்கவில்லை. கண்டகாலிப்பூ சாத்துவதற்காகப் பறிக்கப் போனால், அதில் உள்ள முட்கள் பக்தனின் கையை பதம் பார்த்துவிடும். எனவே அடியார்கள்மீது கருணைக்கொண்டே அவற்றை வேண்டாம் என்று மறுத்தாரே ஒழிய இறைவனுக்கு விருப்பமானது விருப்பமில்லாதது என்று எதுவும் இல்லை’ என்று விளக்கம் அளித்தார்.

பெரும்பாலும் சாம்பிராணியை வாங்கி நெருப்பில் போட்டு புகைப்பது நன்மையை தரும். வாசனை மட்டுமல்லாமல் பூச்சிகள் கூட சாம்பிராணி வாசனைக்கு வராது. இறைவனுக்கு எதை படைத்தாலும் மன நிறைவுடன் செய்தால் அதுவே போதும். அந்த காலங்களில் வீடுகளில் சாம்பிராணி புகை போடுவார்கள். அதனால் தேவையற்றவை விலகி தேவையானவை தேடி வரும் என்பது ஐதீகமாக இருந்தது. அதேப்போன்று நீங்களும் வீட்டில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் கலப்படமில்லாத சாம்பிராணியால் புகை போட்டு வாருங்கள். இதுநாள்வரை உங்களை தொடர்ந்த துரதிர்ஷ்டம் விலகி விரய செலவுகள் கட்டுக்குள் வந்து வீட்டில் செல்வம் மென்மேலும் வளர வழிவகுக்கும்.

7cd23c0aac41f128815e3e42aa724497-2

அந்த சாம்பிராணியை எதனுடன் கலந்து போட்டால் என்னென்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.
சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும். சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும். சாம்பிராணியில் மருதாணி விதைகளை போட்டு தூபமிட சூனிய கோளாறுகள் விலகும். சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வம் நிலைக்கும்.சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும். சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவாரணம் ஆகும். சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும். சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும். சாம்பிராணியில் ஜவ்வாது போட்டு தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும். சாம்பிராணியில் வேப்பம்பட்டையை போட்டு தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும். சாம்பிராணியில் நாய் கடுகை போட்டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலக ஆரம்பிப்பார்கள். சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும். சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை போட்டு தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும். சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போட்டு தூபமிட ஐஸ்வர்யம் கிடைக்கும். சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டு தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.

இப்படி இறைவனை வழிபடும்போது செய்யப்படும் ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு காரணம் உண்டு. அதனால் எதையும் விலக்கி வைக்காமல் நடைமுறைப்படுத்துவதே நாம் சிறப்பாய் வாழ வழிசெய்யும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.