தரையில் எந்த பொருளை எல்லாம் வைத்து பூஜை செய்யக்கூடாது

தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது.

பூஜை என்பது ஒரு ஆன்மீக நடவடிக்கை ஆகும். இது அன்றாடம் கடவுளை வணங்கும் போது ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் ஓர் செயலாகும். அப்படி பூஜை செய்யும் போது, நமக்குத் தெரியாமல் சில தவறுகளுடன் பூஜைகளை செய்வோம். அவ்வாறு தவறுகளுடன் செய்யப்படும் பூஜையால் பலன் ஏதும் கிட்டாது. என்ன புரியவில்லையா? நாம் பூஜை செய்யும் போது சில பொருட்களை தரையில் வைத்து செய்வோம். அப்படி தரையில் வைத்து பூஜை செய்தால், அது துரதிர்ஷ்டத்தை தான் வழங்கும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாத சில பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது.

சிவலிங்கம் வீட்டில் முடிந்த அளவு சிவலிங்கத்தை வைத்திருப்பதை தவிர்த்திடுங்கள். தரையில் நேரடியாக வைக்கவில்லை, துணியின் மீது தான் வைக்கிறேன் என்றும் வைக்காதீர்கள். ஒருவேளை வைக்க வேண்டுமானால், ஒரு மரப்பலகையை வைத்து, அதன் மேல் வைத்துக் கொள்ளுங்கள்.

பூணூல் பூணூல், இந்து மதத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இத்தகைய புனித நூலை எப்போதும் தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாது.

சங்கு சங்கில் லட்சுமி தேவி குடியிருப்பதாக கருதப்படுகிறது. இந்த சங்கை வீட்டு பூஜை அறையில் தரையில் மட்டும் வைக்கக்கூடாது. ஒருவேளை அப்படி வைத்தால், அவ்வீட்டில் பணப் பிரச்சனைகளை அதிகம் சந்திக்கக்கூடும். எனவே கவனமாக இருங்கள்.

விளக்கு ஒவ்வொருவரது வீட்டிலும், காலை மற்றும் மாலையில் விளக்கேற்றுவது வழக்கம். அப்படி விளக்கை ஏற்றுகையில், அதனை தரையில் வைத்து செய்யக்கூடாது, மாறாக இதனை ஒரு சுத்தமான துணியில் மேல் வைத்து ஏற்றலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews